நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்வு..!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்கு கடந்த 30.12.2019 அன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 02.01.2020 அன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவராக சீதாலட்சுமி பசீர் அகமது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


அதனைத்தொடர்ந்து நேற்று 11.01.2020 சனிக்கிழமை அன்று ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் கோபாலப்பட்டிணத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் 1-வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட J.அபுதாஹீர் மற்றும் 3-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அபுதாஹீர் ஆகியோர் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் 12 வார்டு உறுப்பினர்களும், ஊராட்சி மன்ற தலைவரும் என மொத்தம் 13 நபர்கள் இந்த மறைமுகத் தேர்தலில் வாக்களித்தனர். இதையடுத்து அதில் 1-வது வார்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த J.அபுதாஹிர் அவர்கள் 11 வாக்குகள் பெற்று ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக வெற்றி பெற்றார். இதனையடுத்து நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக J.அபுதாஹிர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்பொழுது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள J.அபுதாஹிர் அவர்கள் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து பணி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள J.அபுதாஹிர் அவர்கள் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்தும் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த கிராமமாக திகழ லஞ்சம் மற்றும் ஊழலற்ற பணி செய்ய GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments