மீமிசலில் புதிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெறவுள்ள மாபெரும் கண்டன பேரணியுடன் ஆர்ப்பாட்டம்..!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் வருகின்ற 18.01.2020 சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டன பேரணியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


இந்த பேரணி 18.01.2020 சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் நுழைவு வாயிலில் இருந்து துவங்கி மீமிசல் சந்தைப்பேட்டை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜனாப். கே.எம். சரீப் M.A, தலைவர்-தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அவர்களும், திரு. திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம் அவர்களும், திரு. அய்யாவழி P.பாலமுருகன், நிறுவனர் அய்யா தர்மயுகவழி  பேரவை அவர்களும், திரு குடந்தை அரசன், தலைவர் -விடுதலை தமிழ் புலிகள் கட்சி அவர்களும், அருட்திரு. ஜேசுராஜ் அடிகளார், பாதிரக்குடி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

ஆகவே இந்த மாபெரும் பேரணியுடன் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அலை கடலென திரண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்த அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

நமது உரிமையை வென்றடுக்க அழைப்பது :
அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, 

தொடர்புக்கு : 94435 76641, 90806 24707, 63691 09590, 98424 95656

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments