சவுதி அரேபியா தம்மாமில் சவுதி செந்தமிழர் பேரவையின் தமிழர்கள் ஒன்றுகூடல் மற்றும் 4-ஆம் ஆண்டு பொங்கல் விழா..!



சவுதி அரேபியா தம்மாமில் சவுதி செந்தமிழர் பேரவையின் தமிழர்கள் ஒன்றுகூடல் மற்றும் 4-ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.


சவூதி அரேபியா தம்மாமில் சவுதி செந்தமிழர் பேரவையின் சார்பில் தமிழர்கள் ஒன்றுகூடல் மற்றும் 4-ஆம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 10.01.2020 வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக முகம்மது நூருல்லா, சரவண குமார் மற்றும் வெற்றி செல்வன் ஆகியோரும், தமாம், ரியாத், ஜித்தா, அல் ஹசா, அல் கப்ஜி மற்றும் மீனா மண்டல உறவுகள் சிறப்புரையாற்றினார்கள்.
                                         

அதனைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு காரணம் சமுதாயத்தின் பொறுப்பின்மையே! ஆட்சியாளர்களின் அலட்சியமே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டி, பேச்சு போட்டி, திருக்குறள் போட்டி, பலூன் உடைத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றது.

மேலும் ரியாத் மண்டலம் சார்பாக நாடகம் மற்றும் பாடல் பாடப்பட்டது, ஜித்தா மண்டலம் சார்பில் அரசியல் நையாண்டி மற்றும் பாடல் பாடப்பட்டது, பொங்கல் விழா மற்றும் கட்சி பற்றி நடனம் மற்றும் பறை இசை [அனைத்து மண்டலம்] சார்பில் தனித் திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.

மேலும் பெரியவர்களுக்கான ஆண் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி, உறி அடித்தல், இசை நாற்காலி, சாக்கு ஓட்டம் மற்றும் கபடி போட்டி நடைபெற்றது.

கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமாம் மண்டலம் மற்றும் ரியாத் மண்டலம் அணியினர் மோதினர். இதில் தமாம் மண்டலம் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.


இறுதி நிகழ்வாக விழாவில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. 
                


இதில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது நூருல்லா, அமீர் கான், கலீல் ரஹ்மான், இசாக் கான், அம்ஜத் கான், அஸீஸ் உல் ஹக் மற்றும் சவுதி அரேபியா சவுதி செந்தமிழர் பேரவை உறவுகள் (தமாம், ரியாத், ஜித்தா, அல் ஹசா, அல் கப்ஜி மற்றும் மீனா மண்டலம்) கலந்து கொண்டனர்.





தகவல்: முகம்மது நூருல்லா

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments