என்னம்மா இப்படி பன்றிங்களேமா

தேர்தலில் தோற்றதற்காக நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய நபர்!

தேர்தலில் தோல்வியடைந்த ஒருவர் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிருப்பது வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்றும் இன்றும் வெளியாகிவருகிறது. இந்த தேர்தல் முடிவில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 
    மதுரை மாவட்டம் கேத்துவார்ப்பட்டியில் உள்ள 2வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு முருகேசன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். இவர் தேர்தலில் தோல்வியடைந்ததால் ஊர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக அவர் அந்த பகுதி முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டரில் கேத்துவார்பட்டி 2வது வார்டு உறுப்பினராக கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட தன்னை தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் மற்றொரு வேடிக்கையான விஷயமாய் நீங்க இப்படி செய்வீங்கனு நான் கனவுல கூட எதிர்பாக்கல... என கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
     பொதுவாக தேர்தலில் வெற்றி பெற்றதற்கு போஸ்டர் ஒட்டும் வேலையில் தேர்தலில் தோற்றதற்கு ஒருவர் போஸ்டர் ஒட்டியுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments