அறந்தாங்கி நகர் உபகோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை சனிக்கிழமை (30.05.2026) மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அழியாநிலை 110/33-11 KV துணை மின்நிலையம், 33/11KV அறந்தாங்கி துணை மின்நிலையம் மற்றும் 33/11KV மறமடக்கி துணை மின்நிலையம் ஆகியவற்றிலிருந்து மின் விநியோகம் பெறுகின்ற அறந்தாங்கி நகர் பகுதிகள் முழுவதும் மின் தடை ஏற்படும்.
மேலும், அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி, குரும்பூர், ரெத்தினக்கோட்டை, ஆளப்பிறந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல், மறமடக்கி, திருநாளூர், சிட்டங்காடு, கறம்பக்காடு மற்றும் சுனையக்காடு ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.
எனவே, இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களும் மின் நுகர்வோர்களும் இந்த மின்நிறுத்தம் காரணமாக ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, பராமரிப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அறந்தாங்கி நகர் உதவி செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அறிவிப்பு தவிர்க்க முடியாத பட்சத்தில் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்றும் மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.