பெண்ணின் மூச்சு குழாய்க்குள் சிக்கிய மூக்குத்தி திருகாணி - புதுக்கோட்டை அரசு டாக்டர்கள் அகற்றினர்
பெண்ணின் மூச்சு குழாய்க்குள் சிக்கிய மூக்குத்தி திருகாணி - புதுக்கோட்டை அரசு டாக்டர்கள் அகற்றினர்
பெண்ணின் மூச்சு குழாய்க்குள் சிக்கிய மூக்குத்தி திருகாணியை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர்.

          புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பட்டம்மாள் விடுதியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி புஷ்பம் (வயது 55). இவர் கடந்த ஒரு மாதமாக வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டு இருந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும், இருமல்நிற்கவில்லை.

           இதனிடையே இருமல் வரும்போது, சளியுடன் ரத்தம் வந்தது. இதனையடுத்து அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு வலது நுரையீரலின் நடுப்பகுதிக்கு செல்லும் மூச்சுக் குழாயில் ஒரு சிறிய ஆணி போன்ற பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.

          பின்னர் பரிசோதித்ததில், அது மூக்குத்தியில் உள்ள திருகாணி என்பதும், நுரையீரல் சுருங்கி இருப்பது தெரியவந்தது. அந்த திருகாணியை எடுப்பதற்காக மூச்சுக்குழாயில் அகநோக்கி (லேப்ராஸ் கோப்பி) செலுத்தி டாக்டர்கள் ஆராய்ந்தனர். அப்போது திருகாணியின் தலைப்பகுதி கீழேயும், நுனிப்பகுதி மேலேயும் இருப்பதை கண்டறிந்தனர்.

          இதைத்தொடர்ந்து லேப்ராஸ் கோப்பி மூலம் ஒரு சிறிய இடுக்கி போன்ற கருவி செலுத்தப்பட்டு அந்த திருகாணியின் நுனிப்பகுதியை பிடித்து வெளியே எடுக்கப்பட்டது. தற்போது, புஷ்பம் நலமாக உள்ளார். இந்த சிகிச்சையினை மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் தலைமையில் டாக்டர்கள் தாமோதரன், ஆனந்த் பாபு ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் செய்தனர்.

          இது குறித்து டீன் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், உலோக பொருட்கள் மூச்சுக் குழாயை அடைத்தால், இருமலும், தும்மலும் வரும்போது, அது எளிதில் கண்டறியப்பட்டு விடும். ஆனால் புஷ்பத்துக்கு மூக்குத்தியின் உள்ளே இருந்த திருகாணி கழன்று வலதுபக்க நுரையீரலின் நடுப்பகுதிக்கு செல்லும் மூச்சு குழாயை மட்டும் அடைத்து கொண்டிருந்தது. இதுபோன்ற நிலையில் மார்பு பகுதியில் பெரிய அறுவை சிகிச்சை செய்ய நேரிடும் அந்த அறுவை சிகிச்சையின்போது, நுரையீரல் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. ஆனால் தற்போது லேப்ராஸ்கோப்பி மூலம் மூச்சு குழாய்க்குள் சிக்கிய மூக்குத்தியின் திருகாணி எளிதாக அகற்றப்பட்டது, என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments