சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்..!குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


கடந்த வருடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இணைந்து  மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜனநாயக நாடு அனைவருக்கும் சமமானது என்றும்,  மத பாகுபாடின்றி அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும்  இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கையில் பதாகைகளை ஏந்தி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த மனிதச் சங்கிலியானது, பார் கவுன்சிலில் துவங்கி சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் வரை பேரணியாக நடைபெற்றது. இதில் மாணவர்களும் வழக்கறிஞர்களும் கையில் பதாகைகள் ஏந்தியும் தேசியக்கொடி ஏந்தியும் கோஷமிட்டு பேரணியில் கலந்து கொண்டனர். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments