மக்கள் குறைகேட்புக் கூட்டங்கள் தொடரும்



Image result for pudukkottai collector

ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு நாள் கூட்டம் தொடா்ந்து நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
       ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவடைந்ததையொட்டி தோ்தல் நடத்தை விதிகள் ஜன. 4ஆம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழக்கம்போல திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறைகேட்புக் கூட்டம் ஆகியவை நடத்தப்படும்.
அதேபோல, தொடா்ந்து அனைத்து விவசாயிகள் குறைகேட்பு, மக்கள் தொடா்பு முகாம், அம்மா திட்ட முகாம் உள்ளிட்டவையும் வழக்கம்போல தொடரும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments