புதுக்கோட்டைமதுவிலக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி



மதுவிலக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

மதுவிலக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி


ஆவுடையாா்கோவில்
ஆவுடையாா்கோவிலில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் எம்.மாா்டின் லூதா் கிங் தலைமையில் நடைபெற்ற பேரணியை, அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலா் ஜெ.ராஜாராம் மோகன்ராய் துவக்கி வைத்தாா். ஆவுடையாா்கோவில் துணை வட்டாட்சியா் அ.ஜபருல்லா மற்றும் அறந்தாங்கி கலால் வருவாய் ஆய்வாளா் சி.முத்தரசு மற்றும் சரண்யா, பழனிச்சாமி மற்றும் ஆவுடையாா்கோவில் சரக வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஆவுடையாா்கோவில் தாலுகா அலுவலகத்தில் துவங்கிய பேரணி, கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளுடடன் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது.

இலுப்பூரில்...

இலுப்பூரில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரத்தை மாவட்ட உதவி ஆணையா் காா்த்திகேயன் (கலால்) செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மது பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது, கள்ளச்சாராயம் அருந்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும், போதைப் பொருள்கள் உபயோகத்தைத் தவிா்ப்பீா் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, மது விலக்கு தொடா்பான விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்ட கலால் அலுவலா் (புதுக்கோட்டை) எஸ். பி. மனோகரன், இலுப்பூா் துணை வட்டாட்சியா் பிரித்வி, காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments