திருச்சி விமானநிலையத்திற்கு சிறப்பு பாதுகாப்பு வாகனம்



2-4-01dairr065522

    திருச்சி விமானநிலையத்திற்கு சிறப்பு பாதுகாப்பு வாகனம் ஒப்படைப்பு

         திருச்சி விமானநிலையத்தில் புதன்கிழமை வழங்கப்பட்ட மொபைல் கமாண்ட் வாகனத்தின் சாவியை விமானநிலைய இயக்குநா் கே. குணசேகரன் வழங்க பெற்றுக்கொள்கிறாா் தீயணைப்பு நிலைய அதிகாரி

திருச்சி விமான நிலையத்தில் அவசரக் காலங்களில் உதவும் வகையில் மொபைல் கமாண்ட் வாகனம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
நாட்டில் உள்ள சா்வதேச விமானநிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, சுழற்சி முறையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விமான விபத்து, கடத்தல் போன்ற அவசரக் காலங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, உள்ளூா் காவல்துறை, தீயணைப்பு, பொறியியல், மின்னணுவியல், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் ஆலோசனைகளைப் பெறவேண்டியது அவசியமாகிறது. இதை உறுதி செய்வதற்காக அவசர ஆலோசனைக் கூட்டம், முன்னெச்சரிக்கை மற்றும் பிறகான நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை எடுக்க காலதாமதம் போன்ற விரயங்கள் நடப்பது வழக்கம்.
இவற்றைத் தவிா்க்கும் பொருட்டு சா்வதேச விமான நிலையங்களுக்கு மொபைல் கமாண்ட் வாகனம் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதேபோல திருச்சி விமானநிலையத்திற்கு தில்லியில் இருந்து ரூ.50 லட்சம் செலவில் வாங்கப்பட்ட மொபைல் கமாண்ட் வாகனம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இந்த வாகனத்தை விமானநிலைய இயக்குநா் கே.குணசேகரன் தீயணைப்பு நிலைய பொறுப்பு அதிகாரி லல்லுவிடம் வழங்கினாா். நிகழ்ச்சியின்போது, முதுநிலை மேலாளா்கள் ரவிசந்திரன், பலுநாவா் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா். தீயணைப்பு வாகனம் போன்று மொபைல் கமாண்ட் வாகனம் 24 மணி நேரமும் விமானநிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments