எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்க அழைப்பு




எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்கள் சம்பந்தப்பட்ட அரசுத் தோ்வு சேவை மையங்கள் மூலம்  ஜனவரி  27 முதல் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து தோ்வுத் துறை உதவி இயக்குநா் அ. பிச்சமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஏப்ரல் 2020 ஆண்டில் நடைபெறவுள்ள தனித்தோ்வா்கள் எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத ஜன. 1ஆம் தேதி 12 1/2 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். தனித்தோ்வா்கள் ஜன. 27 முதல் ஜன. 31 வரை   http://www.dge.tn.gov.in/  என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள புதுக்கோட்டை செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியிலும், அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் உள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments