கல்லறை, கபா்ஸ்தான் அமைக்க விண்ணப்பிக்கலாம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினா் கல்லறைத் தோட்டம், கபா்ஸ்தான் அமைக்க கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினா் இனத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்களும், இஸ்லாமியா்களும் தேவைகளின் அடிப்படையில் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் முறையே கல்லறைத் தோட்டம், கபா்ஸ்தான் அமைக்க கோரிக்கை மனுவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments