குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பிப்ரவரி 29 கோவையில் மனித வாழ்வுரிமை மாநாடு.!குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவையில் பிப்ரவரி 29 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் கோவை கொடிசியா திடலில் லட்சக்கணக்கில் மக்கள் திரளும் மனித வாழ்வுரிமை மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். 


இந்த வாழ்வுரிமை மாநாட்டில் அனைத்து சமுதாய பொதுமக்கள்,  அனைவரும் அலை கடலென திரண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்த மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக நமது ஊர் மற்றும் சுற்றுப்புற வாசிகளை அன்புடன் அழைக்கிறார்கள்.

நமது உரிமையை வென்றடுக்க அழைப்பது :

மனிதநேய ஜனநாயக கட்சி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்,
தமிழ்நாடு.

குறிப்பு: மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கோவை மாநாட்டிற்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல்:
மு.முகமது யாசின், 
கோபாலப்பட்டிணம்
மாவட்ட செயலாளர் 
மாணவர் இந்தியா 
மனிதநேய ஜனநாயக கட்சி 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

தொடர்புக்கு: 9787956584, 8667404741

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments