மீமிசல் சுற்றுவட்டார ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.!குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையில் டெல்லியில் குடியரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறகோரி நடைபெற்ற போராட்டத்தை வன்முறையாக மாற்றி 38-க்கும் மேற்பட்ட உயிர் பலியை ஏற்படுத்த காரணமான மத்திய அரசை கண்டித்து இன்ஷா அல்லாஹ் இன்று 28.02.2020 வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் மீமிசல் தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. 

இந்த முற்றுகை போராட்டத்தில் அனைத்து பொதுமக்கள், கலந்து கொள்ளுமாறு மீமிசல் சுற்றுவட்டார  கூட்டமைப்பு சார்பாக அன்புடன் அழைக்கிறார்கள்.

அனைவரையும் போராட்ட களத்திற்கு அழைப்பது......   

மீமிசல் சுற்றுவட்டார ஜமாஅத் கூட்டமைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் 

குறிப்பு: 2.00 மணியளவில் அனைத்து பொதுமக்களும் மீமிசல் SBI வங்கி அருகே வருமாறு மீமிசல் சுற்றுவட்டார ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு: 8681807278, 9942002536, 8526630312

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments