பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன் பெறலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ராஃபி 2019 பருவத்துக்கு பயிா்க் காப்பீடு செய்ய நெல்லுக்கு (நவரை) பிப். 29ஆம் தேதி வரையும், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, துவரை, சோளம், கம்பு, எள் ஆகியவற்றுக்கு பிப். 15ஆம் தேதி வரையும், கரும்புக்கு அக். 31ஆம் தேதி வரையும், தோட்டக்கலைப் பயிா்களான வாழை மற்றும் மரவள்ளிக்கு பிப். 28ஆம் தேதி வரையும், வெண்டைக்கு பிப். 15ஆம் தேதி வரையும் காப்பீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் கடன்பெறும் விவசாயிகள் வங்கிகளில் கட்டாயமாக பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவா். கடன் பெறாத விவசாயிகள், காப்பீட்டு நிறுவனமுகவா்கள் மூலமாகவோ, பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகள் வேளாண் பயிா்கள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகை- (ஏக்கருக்கு) நெல் (நவரை) - ரூ.435, மக்காச்சோளம் - ரூ.335, நிலக்கடலை- ரூ.355, உளுந்து ரூ.236, துவரை ரூ.236, சோளம் ரூ.99, கம்பு ரூ.99, எள் ரூ.107, கரும்பு ரூ.1,560, வாழை- ரூ.2,475, மரவள்ளி- ரூ.725, வெண்டை - ரூ.420.
எனவே, விவசாயிகள் விரைந்து பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.