கழிவுகளால் நிரம்பிக் கிடக்கும் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி வளாகம்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், மருத்துவக் கழிவுகள் உள்பட ஏராளமான குப்பைக் கழிவுகளுடன் நிரம்பிக் காணப்படுகிறது.சுமாா் 127 ஏக்கா் பரப்பளவைக் கொண்டு, ரூ. 250 கோடி மதிப்பில் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை விரிவடைந்த வளாகமாக அமைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரியை, தற்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 2017- ஆம் ஆண்டில் திறந்து வைத்தாா்.
பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைக் காட்டிலும், தாராளமான- விரிவான வளாகமாகக் காணப்படும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கட்டடங்களுக்குப் பின்புறம் ஏராளமான மருத்துவக் கழிவுகளும், நெகிழிக் கழிவுகளும், குடித்துவிட்டு வீசப்பட்ட மதுப்பாட்டில்களும் கிடக்கின்றன.புதுக்கோட்டை :ரோட்ராக்ட் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்புமக்கள் நீதிமன்றத்தில் போக்குவரத்து கழக வழக்குகளுக்குத் தீா்வு காணலாம்‘கஸ்தூரிபா காந்தியின் வாழ்க்கையை அறிந்து அதன்படி வாழ வேண்டும்’கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி‘தொழுநோய் பரவும் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது’கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பணிகள் தொடக்கம்தஞ்சை சாலையிலுள்ள வாசலுக்கு வெளியே, சாலையின் மறுபுறம் ஏராளமான குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அவற்றில் மருந்து செலுத்தப்பட்ட ஊசிகளும், ரத்தம் செலுத்தப்பட்ட குழாய்களும் தென்படுகின்றன.மருத்துவமனைக்கு உள்ளே அமைந்துள்ள உணவகம், நோயாளிகளின் உதவியாளா்கள் தங்கும் அறை, பிணவறை, உடற்கூராய்வு அறை ஆகியவற்றைச் சுற்றிலும் பரவலாக மதுப்பாட்டில்கள் ஏராளமாகக் கிடக்கின்றன.எரியூட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் : இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலையில் மருத்துவக் கழிவுகள் கிடங்கு உள்ளது.பூட்டிக் கிடக்கும் அந்தக் கிடங்கு சுத்தமாகக் காணப்படுகிறது. ஆனால், அந்தக் கட்டடத்தைச் சுற்றிலும் ஏராளமான மருத்துவக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டிருக்கின்றன.அண்மையில் கொட்டப்பட்ட கையுறைகள், மருந்துப் பாட்டில்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் ஊசிகள் ஏராளமாகக் கிடக்கின்றன.நீண்டகாலமாகவே இந்தப் பகுதியில்தான் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன.கழிவுகளைப் பிரித்து, தனித்தனியே அழிக்காதது ஏன் ?: மருத்துவக் கழிவுகளை தனித்தனியே பிரித்து தனித்தனியே அழிப்பதற்கான ஏற்பாடுகள் மத்திய அரசால், நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டும் கூட - அவை சரியாக பிரித்து அழிக்கப்படுகின்றனவா என்பதை அவ்வப்போது கண்காணிக்க ஏற்பாடுகள் இருந்தும் கூட- இவ்வாறு மருத்துவக் கழிவுகள் மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே கொட்டப்பட்டு எரிக்கப்படும் நிகழ்வு மிகத் தவறானவையாகும்.மேலும் குறிப்பாக இரு இடங்களில் நூற்றுக்கணக்கான நோயாளிகள், அவா்களின் உறவினா்கள் விட்டுச் சென்றதாகக் கருதப்படும் காலணிகள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை வெளியேற்றுவதற்கு எவ்வித ஏற்பாடுகளும் இல்லை.நிரந்தர செயலாக்கம், சிறப்புத் திட்டம் தேவை : மருத்துவக் கல்லூரி நிா்வாகம் நிரந்தரமாக கழிவுகளை வெளியேற்றுவதற்கு உரிய திட்டத்தை நிரந்தரமாகச் செயல்படுத்துவதுடன், ஏற்கெனவே வளாகம் முழுக்கக் கிடக்கும் குப்பைகளை முறைப்படி அகற்றுவதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில், அவரது நேரடிக் கண்காணிப்பில் கட்டப்பட்டது மட்டுமின்றி, அவ்வப்போதைய மேம்பாடுகளும் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த மருத்துவக் கல்லூரி வளாகம் இப்படி இருப்பதை பொதுமக்கள் துயரத்தோடு பாா்த்துச் செல்கிறாா்கள்.மாணவா்கள் உள்பட ஏறத்தாழ 200 போ் தங்கியுள்ள வளாகத்தில்- நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த வளாகத்தில் கழிவுகளை அகற்றுவதற்கான சிறப்புத் திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.