இந்திய சிறுபான்மையினரின் எதிர்காலம் கவலை தருகிறது... ஐ.நா. பொதுச் செயலாளர் பேட்டிஇந்தியாவில் சிறுபான் மையினரின் எதிர்காலம், தனக்கு தனிப்பட்ட முறையில் கவலை அளிப்பதாக, ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அண்டோனியா குடெரெஸ் கூறியுள்ளார்.


குறிப்பாக, இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம்,எதிர்காலத்தில் இந்திய முஸ் லிம்களை நாடற்றவர்களாக ஆக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.நான்கு நாட்கள் பயணமாக பாகிஸ்தான் சென்ற அண்டோனியா குடெரெஸ், பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ‘தி டான்’ நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.“வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ் தான் நாடுகளிலிருந்து வரும்துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க முற்படும் இந்தியாவின் புதிய குடியுரிமைச்சட்டம் இயற்றப்பட்ட பின் னர் இந்தியாவில் உள்ள மதசிறுபான்மையினரின் எதிர் காலம் குறித்து, எனக்கு தனிப்பட்ட முறையில் அக்கறையும்கவலையும் ஏற்பட்டுள்ளது. புதிய குடியுரிமைச் சட்டங்களை இயற்றும் அதேவேளையில், அந்தச் சட்டங் கள் நாடற்ற குடிமக்களை உருவாக்கவில்லை என் பதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; உலகின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பதை உறுதி செய்வது முக்கியம்” என்றும்குடெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments