தமிழகத்தின் மாவட்ட தலைநகரில் சிறை நிரப்பும் போராட்டம்!- தீர்மானம் நிறைவேற்றிய தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு!



மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


1.NPR, NRC, CAA ஆகிய சட்டங்களுக்கு எதிராக  நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாட்டு மக்களின் மன நிலையைக் கவனத்தில் கொண்டு இச்சட்டங்களை  வாபஸ் பெற வேண்டும். அதுவரை  எங்கள் போராட்டம் தொடரும்.  இத்தகைய போரட்டத்தில் இருந்து நாங்கள் ஒரு அங்குலம் கூட பின் வாங்க மாட்டோம்.  

2.குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் இப்போது எதிர்த்து வருகிறார்கள். தம் மாநில மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் பாண்டிச்சேரி, பஞ்சாப், மத்திய பிரதேசம், கேரளா, ராஜஸ்தான்,தெலுங்கானா, மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போல  தமிழகத்திலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

3.டில்லியில் அகிம்சை வழியில் போராடிய மக்கள் மீது வன்முறையாளர்களோடு காவல்துறையும் கைகோர்த்து செயல்பட்டததை வன்மையாகக் கண்டிக்கின்றோம். வன்முறையைக்கொண்டு அகிம்சை வழியில் போராடுபவர்களை  ஒடுக்க நினைப்பது ஜனனாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. பிப்ரவரி 29 அன்று நடைபெறும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை பங்கெடுக்கச் செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

5. CAA,NRC, NPR ஆகிய சட்டங்களை திரும்பப்பெற பல்வேறு போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகிறது. எங்கள் உரிமையை மீட்க சிறை செல்லவும் தயார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக வரும் மார்ச் 18-ம் தேதி தமிழகத்தின் மாவட்ட தலைநகரில் சிறை நிரப்பும் போரட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிக்கிறது.


இத்தீர்மானங்களை, மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து, இஸ்லாமிய சமுதாயத்தினரின் போராட்டங்களுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments