சென்னையில் CAA-வுக்கு எதிராக காலவரையற்ற பட்டினிப் போராட்டம்..!குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடெங்கும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை ஒரு வார கால பிரச்சார இயக்கம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது நாடெங்கும் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் விதத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் காலவரையற்றப் பட்டினிப் பேராட்டம் நடத்துகிறது.


தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடத்தாது என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை ராமன் (எல்டியுசி), ராஜேஷ் (மக்களுக்கான இளைஞர்கள்), புகழ்வேந்தன் மற்றும் ஜேம்ஸ், ஜெயபிரகாஷ் நாராயணன் (கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் காலவரையற்றப் பட்டினிப் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments