கோபாலப்பட்டிணத்தில் தர்ணா போராட்டம்.!குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில வழிகாட்டுதலின் படி TNTJ புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக ஆவுடையாா்கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில்  
NPR-ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் இயற்றக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  3 கிளை சார்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிர்புறம் (SP மடம்)  நாளை 29.02.2020 சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. 

இந்த தர்ணா போராட்டத்தில் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் அலை கடலென திரண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் 3 கிளை சார்பில்  அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இழந்த ஜனநாயகத்தை மீட்க! 

இந்திய இறையாண்மையை காக்க.! 

குடும்பத்துடன் அனைவரையும் அழைக்கிறது .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ கோபாலப்பட்டிணம் , ஆர் புதுப்பட்டிணம் முத்துக்குடா கிளைகள் 9976054882 9715503699 8668002341

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments