மீமிசலில் சுற்றுவட்டார ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.!மீமிசல் சுற்றுவட்டார ஜமாஅத் சார்பாக மீமிசல் தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுவட்டார ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி நடைபெற்ற போராட்டத்தை வன்முறையாக மாற்றி 38-க்கும் மேற்பட்ட உயிர் பலியை ஏற்படுத்த காரணமான மத்திய அரசை கண்டித்தும் டெல்லி கலவரத்தை தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரியும், டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று 28.02.2020 வெள்ளிக்கிழமை மதியம் 3.00 மணியளவில் மீமிசல் SBI வங்கியிலிருந்து பேரணியாக சென்று மீமிசல் தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இந்த முற்றுகை போராட்டத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு டெல்லியில் உயிர் பலியை ஏற்படுத்த காரணமான மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். 

இதில் மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்று தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments