வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் இந்து பெண்ணிற்கு சீமந்தம்..! தொப்புள்கொடி உறவை உணர்த்திய நெகிழ்ச்சி நிகழ்வு..! (படங்கள்)
குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.


 இந்த நிலையில் தமிழக சட்டசபை  கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளி கிழமை சென்னை வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசாா் தடியடி நடத்தினா். இதை கண்டித்து தமிழகம் முமுவதும் பல்வேறு இடங்களில் போராட்டன் தீவிரமடைந்தது.  அன்றுமுதல் தொடந்து வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. 


போராட்டத்தின் 13 வது நாளான இன்று போராட்டம் நடைபெறும் மேடையிலேயே இந்து மதத்தைச் சார்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணி பெண்ணிற்கு இந்து முறைப்படியே சீமந்த விழா நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய பெண்கள், பாக்கியலட்சுமிக்கு வளையல் அணிவித்தும், அக்ட்சதை தூவியும் ஆசிர்வதித்து மகிழ்ந்தனர். மேலும், சீமந்த விழாவில் வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் “இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே” என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது அனைவரையும் நெகிழச்செய்தது. 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments