புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகை பேரணி.!மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத , குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
தலைமையிலான அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் & அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக புதுக்கோட்டையில் நாளை 19-02-2020 புதன்கிழமை காலை 10.00 மணி புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் இருந்து பேரணி துவங்க உள்ளது. 

பணமதிப்பிழப்பை போன்ற அனைத்து மக்களின் நிம்மதியை குலைக்கும் CAA குடியுரிமை திருத்த சட்டம் NRC தேசிய குடிமக்கள் பதிவேடு NPR தேசிய மக்கள் தொகை பதிவேடு (புதியது) ஆகிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றகோரி தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஒரே நாளில் கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகை பேரணி.

நம் இந்திய குடியுரிமை காத்திட குடும்பத்தோடு கலந்து கொள்வோம்.

அன்புடன் அழைக்கிறது. 

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
தலைமையிலான அனைத்து இஸ்லாமிய
இயக்கங்கள் & அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments