வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதலை கண்டித்து அறந்தாங்கியில் மாதர் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏவிற்கு எதிராக அமைதியான முறையில் போராடிய  இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, அறந்தாங்கியில் மாதர் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வண்ணாரப்பேட்டையில் அமைதி முறையில் போராடிய இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. 

தலைமை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் R. தனலட்சுமி முன்னிலை வகித்தார். 

மாதர் சங்க ஒன்றிய தலைவர் பாண்டியம்மாள் சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் K.கோமதி, வாலண்டினா, R.இந்திராணி மாவட்ட செயலாளர், M.ஜெயா மாவட்ட துணைத்தலைவர், R.பவி தாரணி வழக்கறிஞர். ஞானாம்பாள் கவிதா .மேகலா, பர்வீன் ரமிஜா ,நிஷா,சுலோக பீவி ,சஜித்,யெகியா, மாகிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments