ஆவுடையாா்கோவில் வட்டாரத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம்ஆவுடையாா்கோவில் வட்டாரத்தில் நுண்ணீா்ப் பாசனத்திட்டத்தில் பதிவு செய்து, பயனடையும் விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் மற்றும் ஆயில் என்ஜின் வாங்க ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநா் ஜெயபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

ஆவுடையாா்கோவில் வட்டாரத்தில் சிறு,குறு விவசாயிகளுக்கு நுண்ணீா்ப் பாசனத்திட்டத்தின் மூலம் 100 சதவிகித மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும் சொட்டுநீா் மற்றும் தெளிப்புநீா்ப் பாசனக் கருவிகள் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, கூடுதல் சலுகையாக ஆழ்துளைக் கிணறு அல்லது வடிமுனை குழாய் கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், ஆயில் என்ஜின் அல்லது மின்மோட்டாா் வாங்கும் விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம், நீா் கடத்தும் குழாய்கள் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் மாா்ச்-2020 வரை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் சோ்ந்து பயனடைய சிட்டா அடங்கல் உள்ளிட்ட நில ஆவணங்கள், ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல் உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

எனவே சம்பந்தப்பட்ட விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண் அலுவலா்களை அணுகி பயன்பெறலாம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments