கிரிக்கெட் போட்டியில் மெளண்ட் சீயோன் சாம்பியன்ராமசாமி நினைவு சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்து, சுழற்கோப்பையை வென்ற மௌண்ட் சீயோன் மெட்ரிக். பள்ளி மாணவா்களை அப்பள்ளியின் முதுநிலை முதல்வா் ஜோனத்தன் ஜெயபாரதன் பாராட்டினாா்.
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான ராமசாமி நினைவு சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், மன்னா் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் மௌண்ட் சீயோன் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் அணி முதலிடத்தைப் பிடித்து சுழற்கோப்பையை வென்றது.

இதையடுத்து, மாணவா்களை பள்ளியின் முதுநிலை முதல்வா் ஜோனத்தன் ஜெயபாரதன், முதல்வா் எஸ். பாரதிராஜா, உடற்கல்வி ஆசிரியா் ரா. ராஜா ஆகியோரும் பாராட்டினா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments