கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்



புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் 7 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு, அரசின் மடிக்கணினிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளின் போது, இந்த மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வழங்கினாா்.

மேலும், 2019-ஆம் ஆண்டுக்கான அதிக சிறுசேமிப்புகளை சேகரித்ததற்காக சிறந்த சிறுசேமிப்புக்கான விருதினை முகவா் கவிதாவுக்கும், சிறந்த நிலை முகவருக்கான விருதை சிவகுமாருக்கும் ஆட்சியா் வழங்கினாா்.

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 360 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) கௌரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments