கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் மேற்கண்ட வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை.
வரும் 27-ம் தேதி பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில், தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். எனினும், திட்டமிட்டபடி பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகள் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பின்னர் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments