ஆதார்- பான் எண் இணைப்புக்கு ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு..!ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் அச்சத்தின் நடுவே மக்களின் நிதி சார்ந்த சுமைகளைக் குறைக்க சில அறிவிப்புகளை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அவர் கூறுகையில், “ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க மார்ச் 31-ம் தேதி என்பது கடைசி நாளாக இருந்தது.

தற்போது மூன்று மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதி ஆதார்- பான் இணைப்புக்கான கடைசி நாளாகும். ஜூன் 30-ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments