அரசநகரிப்பட்டினம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிக்க முயற்சி.!மீமிசல் அருகே பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற போது அவரது மண்டை உடைந்தது.


மீமிசல் அருகே நாட்டாணிபுரசக்குடி கிராமத்தின் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிக்க மேற்கொண்ட முயற்சியில் பெண் படுகாயம் அடைந்தார்.

தளவரை கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி கவிதா(35) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் மீமிசலில் வீட்டிற்க்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு திரும்புகையில் அதன் வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் கம்பியால் தாக்கி கவிதா கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். அப்பொழுது கவிதா கூச்சலிடவே அரு கில் இருந்தவர்கள் அவரை மீட்டு மீமிசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளனர் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments