சீனாவில் பீதியைக் கிளப்பும் புதிய ஹன்ட்டா வைரஸ்.! ஒருவர் பலி.!சீனாவில் புதிதாகத் தோன்றியுள்ள ஹன்ட்டா(hantavirus) என்ற வைரஸுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.


சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தொற்ற்றின் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில் தற்போது அதே சீனாவில் புதிதாக ஒரு வைரஸ் தோன்றியுள்ளது.

யுனான் நகரில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷான்டோங் மாகாணத்தில் யுனான் மாகாணத்தில் பணிபுரிந்துவந்த ஒருவர், திங்கள்கிழமை, ஷான்டோங் மாகாணத்துக்குத் தனிப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்திலேயே உயிரிழந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் ஹன்ட்டா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் பயணம் செய்த 32 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சோதனை முடிவு பற்றிய விவரம் தெரியவில்லை.

இந்த வைரஸ் தற்போது பிரான்சிலும் பரவி இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சில் இருக்கும் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அங்கு இருக்கும், ஓட்டல்கள், பார்கள், கிளப்புகள் மூடப்பட்டன. நியூ ஓர்லியன்ஸ் பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஹன்ட்டா எனும் வைரஸ் எலியைத் தாக்கும். இந்த வைரஸ் மற்ற விலங்குகளைத் தாக்காது. இந்த ஹன்ட்டா வைரஸ், எலிகளிடமிருந்து, எலிகளின் சிறுநீர் மூலம், பரவக் கூடியது. மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவக் கூடிய வாய்ப்பு மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது.

ஹன்ட்டா வைரஸ் தாக்குதலும் புளூ காய்ச்சலைப் போன்றதே. தொடக்கத்தில் இதன் அறிகுறியாகக் காய்ச்சல், குளிர், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிறு வலி ஆகியவையாக இருக்கும். இந்த வைரஸ் தாக்குதலை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது கடினம். பத்து நாட்களுக்குப் பின்னரே தெரிய வரும். இந்த வைரஸும் முதலில் நுரையீரலைத் தாக்கும். பின்னர் ரத்த நாளங்களுக்குள் செல்லும். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் பரவாது.

இதுவரையிலும் சீனாவிலும் ஆர்ஜென்டினாவிலும்தான் இந்த வைரஸ் அறியப்பட்டிருக்கிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments