சவுதி அரேபியாவில் கொரோனாவால் முதல் நபர் உயிரிழப்பு.. இதுவரை 900 பேர் பாதிப்பு.!கொரோனா வைரசால் சவுதி அரேபியாவில் நேற்றைய தினம் முதல் நபர் பலியாகி உள்ளார். இதனால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளிலும் வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள 9 நாடுகளில் அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

முக்கியமாக லெபனான், ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளுக்கு ஈரானிடம் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரசால் சவுதி அரேபியாவில் முதல் நபர் பலியாகி உள்ளார். இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர். கடந்த வாரம் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

அங்கு இன்று மட்டும் 133 பேர் புதிதாக கொரோனா காரணமாக பாதிக்கப்ட்டுள்ளனர். மெர்ஸ் வைரசுக்கு பிறகு அங்கு கொரோனாதான் இவ்வளவு பெரிய தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.
இதுவரை அங்கு 900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 29 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்கள் உடல் நிலை நன்றாக இருப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது .

இதனால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு மொத்தமும் இதனால் மூடப்பட்டுள்ளது. அங்கு மக்கள் வெளியே நடமாட கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது . அதையும் மீறி நடந்தால் இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments