அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் - கலெக்டர் எச்சரிக்கை.!



அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் கொரோனா தொடர்பாக பொதுமக்களுக்கு தொலைபேசி வழியாக மனநல ஆலோசனை வழங்கி வரும் மையத்தினை நேற்று கலெக்டர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்து உள்ளவர்கள் பொதுமக்களின் நலன் கருதி தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 3,204 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து வந்த 224 பேரின் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பு முடிந்து அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர்.

கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பை அறிந்து கொள்ளும் பரிசோதனை மையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும். வெளிநாடுகளில் இருந்து வந்து கையில் முத்திரை குத்தப்பட்ட நபர்கள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் மாவட்ட நிர்வாகம் குறித்தும், கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவலை பரப்பினால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், மாவட்ட மனநலத் திட்ட மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments