அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு.!அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வணிகர்கள், சில்லறை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரியவந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது. 

தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இத்தகைய சூழலில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வணிகர்கள், சில்லறை வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டையில் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரியவந்தால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிய கடை முத்திரை மற்றும் கையொப்பத்துடன் கூடிய இரசீதை விற்பனையாளரின் கடை முகவரி மற்றும் கடை பெயருடன் புகாரினை, மாநில நுகர்வோர் சேவை மைய 044 28592828 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நல அலுவலகம் 04322 221577 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது கட்டணமில்லா 1800114000 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம்.

மேலும், புகார் பற்றிய விவரங்களை விளக்கமாக எழுதி அத்தியாவசிய பொருட்கள் பெற்ற இரசீது நகலுடன் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் மற்றும் குறைதீர்க்கும் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், புதுக்கோட்டை 622005 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் கடிதத்தில் அனுப்பலாம். 

மேலும் புகார் செய்ய schtamilnadu@gmail.com என்ற மின்அஞ்சலிலோ, www.consumer.tn.gov.in என்ற இணைதள முகவரியிலோ தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments