முத்துகுடாவில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதல்.! கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த இருவர் படுகாயம்.!புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா என்ற இடத்தில் எஸ்.பி.பட்டினத்தில் இருந்து வந்த இருசக்கர வாகனமும்,மீமிசலில் இருந்து எஸ்.பி.பட்டினம் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.


இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த கான் முகமது (29) மற்றும் அவரது நண்பரும் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மணமேல்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மீமிசல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments