கீழக்கரையில் வங்கியில் பணம் எடுக்க திரண்ட பொதுமக்கள்.!



மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்திற்க்கு  எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் குடியுரிமை சட்டத்திருத்தை திரும்ப பெறவேண்டும் எனவும், தமிழக அரசு சட்டசபையில் 'குடியுரிமை சட்டத்திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம்' என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்


என இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டமாக கீழக்கரையில் 14-வது நாளாகவும்,தொண்டியில் 21-வது நாளாகவும், தேவிப்பட்டினத்தில் 15-வது நாளாகவும் பல்வேறு நூதன போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று 16.03.2020 கீழக்கரையில் உள்ள வங்கிகளில் இஸ்லாமிய பெருமக்கள் பெருமளவில் திரண்டு வங்கிகளில் தங்களுடைய கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஒரே நேரத்தில் அதிகளவில் திரண்டதால் வங்கி ஊழியர்கள் திகைத்தனர். இதையடுத்து அவர்கள் சேமிப்பு மற்றும் வைப்பு தொகையை எடுத்து சென்றனர். இதனால் பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments