அதிராம்பட்டிணம் ஷாஹீன் பாக் தற்காலிமாக ஒத்திவைப்பு.. போராட்டக்குழு அறிவிப்பு..!தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக் பாணியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், தமிழகம் முழுவதும் நடைபெறும் ஷாஹீன் பாக் போராட்டங்களை தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும் என நேற்று தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் அறிவிப்பு வெளியிட்டிருந்துனர்.

இந்நிலையில் அதிரையில் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா அல்லது நிறுத்தி வைப்பதா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று தக்வா பள்ளியில் நடைபெற்றது.

இதில் தொடர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள், அனைத்து தெரு ஜமாத் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்த ஷாஹீன் பாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்டாலும், வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராடுவது மற்றும் பல போராட்டங்களை முன்னெடுப்பது என அறிவிப்பு செய்யப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments