கொரோனா சந்தேகத்திற்க்கு வாட்ஸ்ஆப் எண் - மத்திய அரசு அறிவிப்பு..!



கொரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக ஊடகங்களில் ஏராளமான போலி செய்திகளும் ஆதாரமற்ற வதந்திகளும் வந்துள்ள நிலையில், மத்திய அரசு MyGov கொரோனா ஹெல்ப்டெஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளது.


நாட்டு மக்களுக்கு கற்பிக்கவும், வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்களிலிருந்து அவர்கள் விலகி இருக்கவும், கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இந்த வாட்ஸ்ஆப் உதவி உருவாக்கப்பட்டுள்ளது. wa.me/919013151515 என்ற இந்த எண்ணை நம் வாட்ஸ்ஆப்பில் இணைத்துக் கொண்டால் போதும். இதில் நாம் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்குப் பதில் பெறலாம்.

மேலும், கொரோனா வைரஸிற்கான தேசிய ஹெல்ப்லைன் எண் 91-11-23978046 மற்றும் கட்டணமில்லா எண் 1075 ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. தவிர, கொரோனா வைரஸ் குறித்த நம் சந்தேகங்களையும் கவலைகளையும் தெரியப்படுத்த மின்னஞ்சல் (ncov2019@gov.in) ஒன்றையும் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஹெல்ப்லைன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments