கொரோனா எதிரொலி: கோபாலப்பட்டிணத்தில் பர்ளான தொழுகை நேரத்தில் மாற்றம்.



கொரோனா வைரஸ் நோய் எதிரொலி காரணமாக தமிழ் மாநில ஜமாஅதுல் உலமா சபை விடுத்த கோரிக்கைக்கு இணங்க கோபாலப்பட்டிணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களில் மற்றம் செய்யப்பட்டு முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


ஐவேளை தொழுகைகளிள் ளுஹர்,அஸர்,இஷா தொழுகைகள் பாங்குடைய நேரத்திலிருந்து பத்து நிமிடம் கழித்தும் மற்றும் ஃபஜ்ரு தொழுகை பாங்கு சொல்லப்பட்டு இருபது நிமிடம் கழித்து இகாமத் சொல்லப்படும். மேலும் மஃரிப் தொழுகை மட்டும் வழக்கம்போல் பாங்கு சொன்ன உடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 20.03.2020 வெள்ளிக்கிழமை முதல் வருகின்ற 31.03.2020 செவ்வாய்கிழமை வரை கோபாலப்பட்டிணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் பாங்கு சொல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் திறக்கப்படும் எனவும் தொழுகை முடிந்தவுடன் மற்ற நேரங்களில் பூட்டப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: முன் பின் சுன்னத் தொழுகைகள் மற்றும் நஃபிலான வணக்கங்கள் ஆகியவற்றை முடிந்தளவு வீட்டிலேயே செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது .

தகவல்: முஸ்லிம் ஜமாஅத், கோபாலப்பட்டிணம்.

கொரோனா வைரஸும், இஸ்லாமிய பார்வையும்!

நபி ﷺ கூறினார்கள், “நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அதிலிருந்து ஓடாதீர்கள்; அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந் நிலத்திற்குள் நுழைய வேண்டாம்”. (புகாரி)

கோபாலப்பட்டிணம் மஸ்ஜித் தொழுகை நேரம்

20-03-2020 முதல் 23-03-2020 வரை

ஃபஜ்ர்
பாங்கு : 5.05 AM
இகாமத் : 5.25 AM 

லுஹர்
பாங்கு : 12.40 PM
இகாமத் : 12:50 PM

அஸர்
பாங்கு : 4.00 PM
இகாமத் : 4.10 PM

மஃரிப்
பாங்கு : 6.29 PM
இகாமத் :உடன்

இஷா
பாங்கு :7.46 PM 
இகாமத் : 7.56 PM 

ஜீமுஆ
பாங்கு : 12.30 PM 
இகாமத் : 1.20 PM

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments