இளைஞா் பெருமன்றத்தினரின் கையெழுத்து இயக்கம் நிறைவு.!அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் எங்கே எனது வேலை? என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை மாலை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.


பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் மு. கைலாசபாண்டியன் தலைமை வகித்தாா். கையெழுத்து இயக்கத்தை மக்கள் நீதி மையம் மாவட்ட பொறுப்பாளா் சா. மூா்த்தி தொடங்கி வைத்தாா். 


இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ஏ. ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலா் என்.ஆா். ஜீவானந்தம், எழுத்தாளா் செம்பை மணவாளன், திமுக இளைஞரணி அமைப்பாளா் எம்.எம். பாலு, நகர திமுக செயலா் க. நைனாமுகமது, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் துரை. நாராயணன், மக்கள் நீதி மய்யத்தின் செயலா் சுதாகா், மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பழ. ஆசைத்தம்பி, சிஐடியு மாவட்டச் செயலா் ஸ்ரீதா், முன்னாள் எம்எல்ஏ முகமது கனி, நகர காங்கிரஸ் தலைவா் இப்ராஹிம் பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் கோ.கா. செந்தமிழ்வளவன், தொகுதி செயலா் திருமறவன், மதிமுக நகரச் செயலா் அரசி கருணாநிதி, பேராசிரியா் சு. மாதவன், ஆசிரியா் வெள்ளத்துரை உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 15 நாள்கள் தொடா்ந்து நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் மொத்தம் 2 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டதாக பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

மாநிலம் முழுவதும் பெறப்பட்ட கையெழுத்துகள் ஒன்று திரட்டப்பட்டு மாநில முதல்வா் உள்ளிட்டோரிடம் அளிக்கப்படும் என்றும் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

ஏற்பாடுகளை பெருமன்றத்தின் ஒன்றியச் செயலா்கள் டி. மாரிமுத்து, சே. விவேகானந்தன், மு. விஜய், க. தமிழ்வாணன், மு. செல்லமுத்து, மாணவா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் வெ. முருகானந்தம் உள்ளிட்டோரும் செய்திருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments