குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த 01.03.2020 தொடங்கி தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் பாங்க் இந்தியா (SBI) வங்கியில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து பணம் எடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்து மீமிசல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நாளில் தங்கள் கணக்கில் இருந்த பணத்தை எடுக்க வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முமுவதும் தொடர் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து 24 மணி நேரமும் கண்டன கோஷங்களும், ஆர்ப்பாட்டங்களும், கண்டன உரைகளும் நடைபெற்று வருகின்றன.
அதனைத் தொடர்ந்து மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் ஸ்டேட் பாங்க் இந்தியா (SBI) வங்கியில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஒரே நாளில் மீமிசல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் கணக்கில் இருந்த பணத்தை எடுக்க முயன்றதால் பரபரப்பும், ஊழியர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வங்கி மேலாளர் கூறியதாவது: தற்பொழுது அனைவருக்கும் பணம் கொடுப்பதற்கு கையிருப்பு இல்லாத காரணத்தால் வருகின்ற திங்கள்கிழமை அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என்றும் மேலும் இது சம்மந்தமாக மேலதிகாரிகளுக்கு உங்கள் கோரிக்கை தெரியப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
சேமிப்பு பணத்தை எடுக்க வங்கியை முற்றுகையிட்ட மக்கள்..! (காணொளி)
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.