கோபாலப்பட்டிணத்தில் TNTJ சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டம்.!குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த போராட்டத்தை மாணவர்கள்,அனைத்து சமுதாய மக்கள் மற்றும் இயக்கங்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில வழிகாட்டுதல் படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் NPR-ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் இயற்றக்கோரி நேற்று (29/02/2020) சனிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூன்று கிளைகள் சார்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிர்புறம் (SP மடம்) மதியம் 2.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெற்றது.


இதில் சகோதரர் அப்துல் ரசாக் (TNTJ பேச்சாளர்) இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பிலும், சகோதரர் குலாம் பாட்ஷா (மாவட்ட துணைத் தலைவர்) CAA,NRC,NPR என்ன பாதிப்புகள் என்ற தலைப்பிலும் மக்களிடம் எடுத்துரைத்தனர். 


இந்த தர்ணா போராட்டத்தில் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து ஜமாஅத்தார்கள், அனைத்து இயக்க சகோதரர்களும் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவல்: 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ கோபாலப்பட்டிணம் , ஆர் புதுப்பட்டிணம் முத்துக்குடா கிளைகள்...
புதுக்கோட்டை மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments