கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் TNTJ சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டம்…!!மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் முஸ்லிம்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் 7 இடங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் கிரு‌‌ஷ்ணாஜிப்பட்டினத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மீரான் தலைமை தாங்கினார்.

இதில் திரளான ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட ஊர் மக்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். என்.ஆர்.சி, என்.பி.ஆர். உள்ளிட்ட சட்டங்களை அமல் படுத்தக்கூடாது. தமிழக அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி கோ‌‌ஷங்களை எழுப்பினார்கள்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments