மீமிசலில் 144 உத்தரவு தடையை மீறி நடைபெற்ற வாரச்சந்தை..! கடைகளை அப்புறப்படுத்திய காவல்துறை.!



கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாரச்சந்தைகளை நடத்த தமிழக அரசு தடை விதித்து இருந்தது.


இந்த தடையை மீறியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யாமலும் நேற்று 01.04.2020 புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் வாரச்சந்தை நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் பலர் சந்தையில் குறைந்த அளவு இருந்த கடைகளில் முண்டி அடித்துக் கொண்டு காய்கறிகளை வாங்கினர்.

சமூக இடைவெளி விடாமல் ஒருவருடன் ஒருவர் உரசிக் கொண்டு நின்றனர். இதையறிந்த மீமிசல் போலீசார் அங்கு சென்று பொதுமக்களை கலைந்து போக செய்து, வியாபாரிகளை கடைகளை அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments