புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,765 பேர் கைது.!



கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் தடை உத்தரவை மீறியதாக 222 வழக்குகள் பதிவுசெய்து 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது இடங்களில் வரும் போது முக கவசம் அணியுமாறும், சமூக இடைவெளி கடைபிடிக்குமாறும் போலீசார் பலமுறை கூறிவரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில், தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்த 300 நபர்களிடம் 252 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தநாள் முதல் இது வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்து 415 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 765 பேர் கைது செய்யப்பட்டு, 4 ஆயிரத்து 65 இரு சக்கரவாகனங்கள், 59 நான்கு சக்கர வாகனங்கள், 219 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments