கொரோனா எதிரொலி: முக்கண்ணாமலைபட்டியில் உள்ளூர் மக்களுக்கு வட்டியில்லா கடன் கொடுத்து அசத்தும் இளைஞர்கள்.!கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேலைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். இதனால் சில குடும்பங்கள் உணவுக்கு வழியின்றி சிரமம் அடைந்தனர்.


இந்த நிலையில் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைபட்டியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் தினசரி கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தினக் கூலியினால் குடும்பம் நடத்தும் ஏழை மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த முஸ்லிம் இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் உள்ளூர் பொது மக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. 

அதன் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு கடன் வழங்கி வருவதாகவும், இதில் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,500 வழங்கப்படுகிறது. இந்த பணத்தை இயல்பு நிலை திரும்பிய பிறகு 60 நாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த கடன் உள்ளூர் மக்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments