கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல அனுமதி.!



புதுக்கோட்டை மீன்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள 30 மீனவ கிராமங்கள் இரு பகுதிகளாக, கட்டுமாவடி முதல் கோட்டைப்பட்டினம் வாரை ஒரு பகுதியாகவும்,


ஜெகதாப்பட்டிணம் முதல் ஏனாதி வரை ஒரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் கீழ்க்கண்ட விபரப்படி, நாளை 13.04.2020 முதல் மீன்பிடிக்க சில நிபந்தனைகளுடன் மேற்கொண்டிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டிணம், R.புதுப்பட்டிணம் மற்றும் முத்துக்குடா மீனவர்கள் கடலுக்கு செல்லும் கிழமை - செவ்வாய், வியாழன், ஞாயிறு 

கட்டுமாவடி முதல் கோட்டைப்பட்டிணம் வரை - திங்கள், புதன், சனி

ஜெகதாப்பட்டிணம் முதல் ஏனாதி வரை - செவ்வாய், வியாழன், ஞாயிறு 

மேலும் நிபந்தனைகளை மீறும் மீனவ கிராமங்களுக்கு மீன்பிடிக்க அளிக்கப்பட்ட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments