உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 7000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மாநாடு தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பான நம்முடைய கேள்விகளுக்கு திமுக-வை சேர்ந்த புதுக்கோட்டை அப்துல்லாவின் அதிரடியான பதில்கள் வருமாறு,
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் இருக்கும் இடங்களில் அருகில் இருப்பவர்கள் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை இயல்பாக ஏற்பட்டு விடுகிறதே?
வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் பற்றிய முறையான அறிவிப்பு இதுவரை செய்யவில்லை. இப்போது உங்களுக்கு கரோனா வந்திருக்கு, இவர் நான்காவது தெருவில் மூன்றாவது வீட்டில் இருக்கிறார் என்றால் உங்களைப் பார்த்து நான்கு தெருக்காரர்கள் அலார்ட் ஆகிவிடுவார்கள். அப்படி யாரையும் நீங்கள் சொல்லவில்லையே?
நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சொல்லி, அந்த மாநாட்டுக்குப் போய்விட்டு வந்தவங்க இருக்காங்க, இந்த மாநாட்டுக்குப் போய்விட்டு வந்தவங்க இருக்காங்க, அப்படித்தானே சொல்கிறீர்கள். நீங்கள் வேறு யாரைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். திரும்பத் திரும்ப ஒரே ஆளைப் பற்றித்தானே சொல்கிறீர்கள். மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று தினமும் 70, 80 பேர் எனச் சொல்கிறார்கள், ஒரு இரண்டு பேரை மட்டும் விட்டுவிட்டு இவர்களுக்கு எல்லாம் கரோனா பாதிப்பு இருக்கு என்று அரசாங்கம் தொடர்ந்து செல்லிவருகிறது. ஆனால் எங்களை இன்னும் சோதிக்கவே இல்லை என்று மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கூறுகிறார்களே?
நேற்று அவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் 1200 பேர் என்றும் அவர்களில் 961 பேருக்கு அந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்று கூறியிருக்கிறார்களே, ஏற்கனவே அவர்கள் கூறியதற்கும் தற்போது அவர்கள் கூறுவதற்கும் நிறைய முரண் இருக்கிறதே?
ஏற்கனவே அவர்கள் கூறிய கணக்குப்படி பார்த்தால் மாநாட்டுக்குச் சென்றவர்களில் 900 பேருக்கு அந்தப் பாதிப்பு இருக்க வேண்டும். குறைந்தது 800 பேருக்காவது இருந்திருக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே சொன்னார்களே 58 பேருக்கு இருக்கு, 68 பேருக்கு இருக்கு என்று. அவர்கள் சொன்னதை எல்லாம் கூட்டினால் இந்தக் கணக்குத்தான் வரும். நேற்று அவர்கள் சொன்ன கணக்குபடி 1,50,160 பேருக்குத்தான் பாதிப்பு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள். மக்களைக் குழப்ப வேண்டும் என்றே செய்ததுதான் இது. டெஸ்ட் ரிசல்டை அவர்களிடம் கொடுக்கும்போது உண்மை தெரிந்துவிடும் என்பதால் மாற்றி தற்போது சொல்லியிருக்கிறார்கள்.
இந்த இக்கட்டான நேரத்தில் தென்காசியில் மசூதியில் தொழுகைக்காக 50-க்கும் மேற்பட்டவர்கள் கூடியது தற்போது வைரலாக்கப்பட்டுள்ளதே?
யார் கூட்டமாக இந்த நேரத்தில் கூடினாலும் அது தவறுதான். ஆனால் 50,00,000 லட்சம் மக்கள் இருக்கின்ற ஒரு சமூகத்தில் 50 பேர் கூடியதை மட்டும்தான் பேசுகிறீர்கள். மீதியிருக்கிற இருக்கின்ற இத்தனை லட்சம் பேர் வீடுகளில் தானே இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஏன் பேசவில்லை. தொழுகை நடத்த கூடியிருந்த பகுதி முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி. மாற்று மதத்தினர் கிட்டதட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குப் பிறகுதான வசிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அங்கே திடீர் என்று காவல்துறையினர் வருகிறார்கள் என்றால் எப்படி வருவார்கள். அங்கே இருப்பவர்கள் தகவல் சொன்னால்தானே வர முடியும். போலீஸ் என்ன வெத்தலையில் மை போட்டா பார்க்க முடியும். வீடியோ வைரல் ஆனதாகச் சொல்கிறீர்கள், அதை எடுத்து யார், மசூதியில் அருகில் இருந்த இஸ்லாமியர்கள் தானே? அந்த வீடியோவில் அது தெரிகிறதே. அதைப் பற்றி மட்டும் ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள்? என முடித்தார்.
Source: நக்கீரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.