அவசரப் பயண அனுமதி; மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தாரை அணுகலாம்!



சென்னையில் இருந்து இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சைக்காக (அவசரப் பயணமாக) வெளியூர் செல்ல விரும்புவோர் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி துணை ஆணையாளர் அலுவலகத்தில் அனுமதி கடிதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.


 மேலும் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரையும் அனுமதி கடிதம் பெறலாம் எனவும், காவல்துறை தரப்பில் பாஸ் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டைப்பெற ஆட்சியரை அணுகலாம் என்றும், மாவட்டத்திற்குள் பயணிக்க தாசில்தார்களிடம் அனுமதி பெறலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Source: நக்கீரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments