அறந்தாங்கியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்.!



மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி நகரம் சார்பில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


அறந்தாங்கி நகர் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர், மஜக மாவட்ட சூற்றுச்சூழல் அணி செயலாளர் சாகுல் அமீது தொடக்கி வைக்க நகர செயலாளர் ஜகுபர் சாதிக் தலைமையில் விநியோகம் செய்யப்பட்டது.



இதில் தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் முகம்மது ஹாலித் உள்ளிட்ட மஜகவினர் கலந்து கொண்டு தங்கள் இல்லங்களிலிருந்து பாத்திரங்கள் கொண்டு வந்து ஆர்வமுடன் பெற்றுக்கொண்ட பொதுமக்களுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிவந்த நபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் வாகனத்தில் எடுத்து சென்று விநியோகம் செய்தனர்.


மேலும்,நகரின் பிற பகுதிகளிலும் கபசுர குடிநீரானது தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.

தகவல்;
மஜக தகவல் தொழில் நுட்ப அணி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments